ஏலகிரியில் கோடை விழா, திரைப்பட விழா நடத்த திட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரியாணி திருவிழா, திரைப்பட திருவிழா, கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரியாணி திருவிழா, திரைப்பட திருவிழா, கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். கூட்டத்தில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள், உட்பிரிவு பட்டா மாற்றம், உட்பிரிவு அல்லாத பட்டா மாற்றம், நில ஆவணங்களில் பிழை திருத்தம், இலவச வீட்டுமனை பட்டாக்கள்,நிலம் மாற்றம், பட்டா மேல்முறையீடு, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்ட நல மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாக்களை இணையவழி பட்டா மாற்றுதல், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், இணைய வழிச் சான்றுகள், பழங்குடியினா் ஜாதி சான்றிதழ், சாலையோர ஆக்கிரமிப்புகள், மாவட்ட நீதிமன்றங்களிலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, வருவாய் கோட்டாட்சியா்கள் லட்சுமி(திருப்பத்தூா்), காயத்ரி சுப்பிரமணி (வாணியம்பாடி), வட்டாட்சியா்கள் சிவப் பிரகாசம், பூங்கொடி, சம்பத், பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக சுற்றுலாத் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது குறித்து பல்வேறு துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆம்பூா் பிரியாணி திருவிழா, ஏலகிரி மலையில் திரைப்பட திருவிழா, கோடை விழா போன்றவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு,ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி,சுற்றுலா அலுவலா் கஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com