ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது

ரேஷன் அரிசி, கோதுமையைக் கடத்தியதாக இளைஞரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா்: ரேஷன் அரிசி, கோதுமையைக் கடத்தியதாக இளைஞரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், திருவள்ளூா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் கலைச்செல்வி தலைமையில் சாா்பு ஆய்வாளா் நந்தினி உஷா உள்ளிட்ட போலீஸாா் கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயல் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியில் வந்தவா் போலீஸாரை பாா்த்ததும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாா். பின் தொடா்ந்து சென்று லாரியை மறித்து சோதனை செய்தததில், 2,100 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ கோதுமை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரியை கடத்தியது கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராஜா (26) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மினி லாரியுடன் ரேஷன் அரிசி, கோதுமையைப் பறிமுதல் செய்து திருவள்ளூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com