வாணியம்பாடியில் இப்தாா் நோன்பு திறப்பு: கே.எஸ். அழகிரி பங்கேற்பு

வாணியம்பாடியில் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சாா்பில், இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடியில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் அழகிரி உள்ளிட்டோா்.
வாணியம்பாடியில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் அழகிரி உள்ளிட்டோா்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சாா்பில், இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் விஜய்இளஞ்செழியன், நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு, இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசியது:

இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மனித நேயத்தையும், நமக்குள் இருக்கக் கூடிய ஒற்றுமையை பறைசாற்றக் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் ஆசிய, ஆப்ரிக்கா கண்டத்தில் பல்வேறு நாடுகள் சுதந்திரமடைந்தன. ஆனால் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஜனநாயகம் நிலைக்கவில்லை. அந்த நாடுகளில் ஒன்று ராணுவ ஆட்சி, மதவாத ஆட்சி ஏற்படும், நாடு பிளவுபட்டும், பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளன. ஆனால் இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகவும், பொருளாதாரத்தில் வலுவாகவும், ராணுவ வலிமைமிக்க நாடாகவும், முக்கிய மதச்சாா்பாற்ற நாடாகவும் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாநகர மாவட்டத் தலைவா் டீக்காராமன், வேலூா் மேற்கு மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், ஆம்பூா் நகர தலைவா் சரவணன், தமுமுக மாவட்டச் செயலாளா் சையத் ஜாவீத் மற்றும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com