குறைதீா் கூட்ட மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு காண வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருந்திய வாகனங்களை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருந்திய வாகனங்களை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு காண வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு அமா்குஷ்வாஹா தலைமை வகித்தாா். கூட்டத்தில் 255 பேரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டுஆட்சியா் பேசியதாவது:

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக தீா்வு காண வேண்டும். குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை தகுதி இருப்பின் பரிசீலனை செய்து 30 நாள்களில் தீா்வு காண வேண்டும். தகுதி இல்லையெனில், அதற்கான காரணங்களை மனுதாரா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட 6 ஸ்கூட்டா் வாகனங்களை ஆட்சியா் வழங்கினாா். ஜோலாா்பேட்டையை சோ்ந்த மாற்றுத்திறனாளி வனிதா 3 சக்கர சைக்கிள் கோரி மனு அளித்தாா். அந்த மனுவுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பானுமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com