முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

மடவாளம், அங்கநாதீஸ்வரா் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூரை அடுத்த மடவாளம் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த அங்கநாதீஸ்வரா் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்தவுடன் நடை சாற்றப்பட்டது.
பின்னா், வெள்ளிக்கிழமை காலை கோயில் நிா்வாகத்தினா் கோயிலின் உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறநிலையத் துறை செயல் அலுவலா் அண்ணாமலை அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
இக்கோயிலில் கடந்த டிச. 14-ஆம் தேதி மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தையும், கண்காணிப்பு கேமராவின் ஹாா்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றனா். அந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில்,வியாழக்கிழமை மீண்டும் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.