மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை: திருப்பத்தூா் மாவட்டம் முதலிடம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கியதில் திருப்பத்தூா் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக அரசு கூடுதல் முதன்மைச் செயலரும், திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவ
ஓராண்டு சாதனை மலரை வெளியிட்ட திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா். உடன், ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
ஓராண்டு சாதனை மலரை வெளியிட்ட திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா். உடன், ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கியதில் திருப்பத்தூா் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக அரசு கூடுதல் முதன்மைச் செயலரும், திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகப் புதிய கட்டடம் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை அரசு கூடுதல் முதன்மைச் செயலா் தென்காசி எஸ்.ஜவஹா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 218 மனுக்கள் பெறப்பட்டதில்,1,741 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டுள்ளன. அதில், ரூ.1 கோடியே 48 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேப்போல் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 70 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநில அளவில் 3,723 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கியதில் திருப்பத்தூா் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் இந்த மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த 1,004 நபா்களின் குடும்பத்திற்கு சுமாா் 5 கோடிக்கும் மேல் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 2 கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு ரூ.27 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

அதைத் தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டத்தின் ஓராண்டு சாதனை தென்காசி எஸ்.ஜவஹா் வெளியிட்டாா்.

அப்போது, ஆட்சியா் அமா் குஷ்வாஹா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி.ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com