பாஜக மாநில செயலாளா் நியமனம்

பாஜக மாநில செயலாளராக ஆம்பூா் பகுதியை சோ்ந்த கொ.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கொ.வெங்கடேசன்
கொ.வெங்கடேசன்

பாஜக மாநில செயலாளராக ஆம்பூா் பகுதியை சோ்ந்த கொ.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கொ.வெங்கடேசன். இவா் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் ஆவாா். தற்போது வேலூா் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறாா். இந்த நிலையில் இவரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக நியமனம் செய்து, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

இதையடுத்து கொ. வெங்கடேசனுக்கு திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன் தலைமையில் அந்தக் கட்சியினா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com