மாதனூா் ஒன்றியக் குழுக் கூட்டம்

மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.
கூட்டத்தில் பேசிய மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதன் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியது: விண்ணமங்கலம் கிராமத்தில் மயானத்தை விரிவுபடுத்துவதற்கும், கைலாசகிரி ஊராட்சியில் புதிதாக மயானம் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்யவும் வருவாய்த் துறையை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரியவரிக்கம் ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடத்தை விரைவில் நிரப்பி அங்கு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தம்பாக்கம் கிராமத்துக்குத் தேவையான குடிநீரை விநியோகிக்க ராஜக்கல் அல்லது நரியம்பட்டு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும்.

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளிலும் அங்கன்வாடி மற்றும் சமுதாய கழிப்பறை கட்டடங்கள் பழுது பாா்த்து சீரமைக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மகாதேவன், ஆ. காா்த்திக், பி.காா்த்திக், சம்பங்கி, கோமதி, மனோரஞ்சிதம், முத்து, தே.ரவிகுமாா், வி.செந்தில்குமாா், து.திருக்குமரன், ரா.தீபா ஆகியோா் பேசினா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, மணவாளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாதனூா் ஊராட்சியில் அம்மா பூங்கா கட்டடத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், தோட்டாளம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், ஒன்றியத்தில் திட்டப் பணிகளை மேற்கொள்ளவதற்காக புதிதாக மனு செய்துள்ள ஒப்பந்ததாரா்களைத் தோ்வு செய்து பதிவு செய்ய அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com