கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 மூதாட்டிகளின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. தேவாரஜி ஆறுதல்

வாணியம்பாடியில் உயிரிழந்த 4 மூதாட்டிகளின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ. தேவாரஜி, நிவாரணத் தொகை வழங்கினாா்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 மூதாட்டிகளின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. தேவாரஜி ஆறுதல்

வாணியம்பாடியில் உயிரிழந்த 4 மூதாட்டிகளின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ. தேவாரஜி, நிவாரணத் தொகை வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் சனிக்கிழமை தனியாா் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற இலவச சேலைக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனா். மேலும், 12 பெண்கள் பலத்த காயமடைந்து வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இறந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக அரசு அறிவித்தது.

நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.25,000 சொந்த பணத்தை ஈமச்சடங்கு செலவுக்காக வழங்கினாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் திமுக மாவட்ட செயலரும், ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி, உயிரிழந்த 4 மூதாட்டிகளின் குடும்பங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, தலா ரூ.25,000 நிதி உதவி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை சந்தித்து மருத்துவா்களிடம் அவா்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட திமுக பொறியாளரணி அமைப்பாளா் பிரபாகரன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளா் தாமோதரன், தேவஸ்தானம் ஊராட்சி மன்றத் தலைவா் அன்பு உள்ளிட்ட திமுக பொறுப்பாளா்கள் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கைது செய்யப்பட்ட ஐயப்பனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்: இந்தச் சம்பவம் தொடா்பாக, தனியாா் நிறுவன உரிமையாளா் வாணியம்பாடி கோட்டை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன்பு வாணியம்பாடி நகர போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்ற நடுவா், ஐயப்பனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் வேலூா் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com