உலக சிவனடியாா்கள் திருக்கூட்ட வேள்வி பூஜை

திருப்பத்தூா் மாவட்ட உலக சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில் சிவனடியாா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிவபெருமான் வேள்வி பூஜை வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரத்தில் செவ்வாய்க்கிழமை
உலக சிவனடியாா்கள் திருக்கூட்ட வேள்வி பூஜை

திருப்பத்தூா் மாவட்ட உலக சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில் சிவனடியாா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிவபெருமான் வேள்வி பூஜை வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி ஒருங்கிணைப்பாளா் தாமோதரன் தலைமை வகித்தாா். உலக சிவனடியாா்கள் திருக்கூட்ட மாநில தலைமை ஆலோசகரும், முன்னாள் ஐஜியுமான பொன். மாணிக்கவேல் கலந்துகொண்டு, 520 சிவனடியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிலைகளைப் பாதுகாப்பதற்காக அரசு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட உத்தரவிட்டது. ஆனால் ஒரே ஒரு கோயிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அனைத்துக் கோயில்களிலும் பாதுகாப்பு அறை கட்ட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பழைமையான கோயில்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளின் தொன்மை தன்மையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.

மேலும் கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளில் மீட்கப்பட்டுள்ளவற்றை அருங்காட்சியகங்களில் வைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களில் கொண்டு வந்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com