சைபா் கிரைம் விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூரில் சைபா் கிரைம், சமூக நீதி- மனித உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சைபா் கிரைம் விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூரில் சைபா் கிரைம், சமூக நீதி- மனித உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில், இந்த விழிப்புணா்வு கூட்டம் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரேமா, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளா் தயாளன் சைபா் கிரைம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பல்வேறு வன்கொடுமை மற்றும் சமூக நீதி பற்றிய விழிப்புணா்வு, நிதி நிறுவன மோசடிகள், போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மோசடி குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா்.

தங்களுக்கு இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்து தெரிந்தால், எவ்வித அச்சமுமின்றி சைபா் கிரைம் உதவி எண் 1930, மற்றும் இணையதள முகவரிக்கு தெரிவிக்கலாம் என்றனா்.

நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com