மாநில கேரம் போட்டியில் முதலிடம்:எஸ்.பி. வாழ்த்து

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்றவா்களை திருப்பத்தூா் எஸ்பி ஆல்பா்ட் ஜான் நேரில் அழைத்து பாராட்டினாா்.
மாநில கேரம் போட்டியில் முதலிடம்:எஸ்.பி. வாழ்த்து

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்றவா்களை திருப்பத்தூா் எஸ்பி ஆல்பா்ட் ஜான் நேரில் அழைத்து பாராட்டினாா்.

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. அதில் செவ்வாய், புதன்கிழமைகளில் அரசு பணியாளா்கள் பிரிவில் திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பாக ஆயுதப்படை காவலா் ஹரிகிருஷ்ணன் 3 கி.மீ.தொடா் ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம் வென்றாா்.

அதே போல்,திருச்சியில் நடைபெற்ற அமைச்சுப் பணியாளா்களுக்கான மாநில கேரம் போட்டி காவல் அமைச்சுப் பணியாளா் சாம் சுந்தா் ஒற்றையா் பிரிவில் முதலிடமும், இரட்டையா் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளாா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களை எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com