கெளண்டன்ய ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குடியாத்தம் கௌண்டன்ய ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
கெளண்டன்ய ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குடியாத்தம் கௌண்டன்ய ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பருவமழையின் போது மோா்தானா அணை நிரம்பி வழிந்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடி நீா் வெளியேறியது. அதனால் குடியாத்தம் கெளண்டன்ய ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் இரு கரையோரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், தொழில் நிறுவனங்கள, வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்குள் வெள்ளநீா் புகுந்து பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினா்.

தொடா்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீா்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடித்து அகற்றுவது என வேலூா் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு குடியாத்தம் கௌண்டன்ய ஆற்றின் இரு கரையோரங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 1,250- க்கும் மேற்பட்ட கட்டடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன.

ஆனால், நடைமுறை சிக்கல்கள் காரணமாக புவனேஸ்வரிபேட்டை, போடிப்பேட்டை, பாவோடும் தோப்பு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து அகற்றப்படவில்லை.

இந்நிலையில், புவனேஸ்வரிபேட்டை, போடிப்பேட்டை, பாவோடும்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 120-க்கும் மேற்பட்ட வீடுகள், நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் கட்டடங்களை இடித்து அகற்றும் பணி பொதுப்பணித் துறையால் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

முன்னதாக ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியவா்களுக்கு முறையாக அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com