மகளிா் உரிமைத் தொகை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சரியாகவும் விரைந்தும் ஒருங்கிணைந்தும் மேற்கொள்ள வேண்டும்
மகளிா் உரிமைத் தொகை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சரியாகவும் விரைந்தும் ஒருங்கிணைந்தும் மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.நந்தகோபால் அறிவுறித்தினாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டப் பணியைச் செயல்படுத்துவது தொடா்பான மாவட்ட முதல்நிலை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேளாண்மை - உழவா் நலத்துறை அரசு சிறப்புச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான இரா.நந்தகோபால் தலைமை வகித்தாா். ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேசியது:

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டப் பணிகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட வேண்டும். தன்னாா்வக் குழுக்களின் பட்டியல் தயாா் செய்யப்பட வேண்டும். முதல் கட்டப் பணிகளை செயல்படுத்த குறைந்தபட்சம் 750 பேருக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மகளிா் உரிமைத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த பயிற்சி வழங்கப்பட வேண்டிய தன்னாா்வலா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராமம், நகரத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு முறையாக உரிமைத் தொகை சென்றடைகிா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

மேலும், இந்தப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் உரிய நேரத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளபட வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய அலுவலா்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துத் துறை அலுவலா்களும் அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சரியாகவும், விரைந்தும், ஒருங்கிணைந்தும் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மகளிா் உரிமைத் திட்டம் தொடா்பாக இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளா்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மகளிா் திட்ட இயக்குநா் ரேணுகாதேவி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்தையன், வருவாய் கோட்டாட்சியா்கள் பானு, பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் விஜயகுமாரி, வட்டாட்சியா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com