பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முன்னதாக, அக்ரஹாரம் ஊராட்சியில் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமையும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com