திருப்பத்தூா்: 37,575 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 37,575 மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதி மொழி வாசித்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதி மொழி வாசித்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 37,575 மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கதிரிமங்கலம்,கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ஆதியூா்,மாடப்பள்ளி ஊராட்சிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அடா் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட மேட்டுசக்கரககுப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு,ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி முன்னிலை வகித்தாா்.

பின்னா்,ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளா்களுக்கு குடிமை பொருள்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி வாா்டு 2 மற்றும் மண்டலவாடி,கேத்தாண்டப்பட்டி ஊராட்சி,நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மல்லகுண்டா,கே.பந்தாரபள்ளி ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை நடும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில்,மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குனா் விஜயகுமாரி, நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ( திருப்பத்தூா்), காவியாவிக்டா் (ஜோலாா்பேட்டை), நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,நகா்மன்ற உறுப்பினா்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com