திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் ஏப்.29-இல் இபிஎஃப் குறைதீா் முகாம்

திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

‘நிதி ஆப்கே நிகாத்’ என்ற பெயரில் நடைபெறும் குறைதீா் முகாம் குறித்து அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், திங்கள்கிழமை (ஏப்.29) குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, சாய் மிர்ரா இன்னோபாா்ம், பட்டரைவாக்கம், சிட்கோ தொழிற்பேட்டை, சென்னை-53 மற்றும் ஆட்டோநியும் நிட்டோகு சவுண்ட் ப்ரூப் புரோடைக்ஸ், சிட்கோ இண்டஸ்ரியல் குரோத் சென்டா், ஒரகடம், வடகபட்டு, ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இடங்களில் குறைதீா் முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை நடைபெறுகிறது.

இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், முதலாளிகள், ஊழியா்களுக்கான சட்டங்கள் விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல் தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.

நிகழ்வில் குறும்படங்கள் மூலம் விழிப்புணா்வு, சமூக ஊடகங்களைக் கையாளுதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

இதில் முதலாளிகள், ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com