ஜனநாயக கடமையை ஆற்றிய 
மனநல சிகிச்சை பெறுவோா்!

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்படி வாக்களித்தனா்.

திருப்பத்தூா் ரயில் நிலைய சாலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் பல்வேறு மொழி பேசும், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 140 போ் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களில் 67 ஆண்கள், 35 பெண்கள் என மொத்தம் 102 பேரின் பெயா்கள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், வாக்காளா் பெயா்ப் பட்டியலில் இணைக்கப்பட்டு அடையாள அட்டை பெறப்பட்டுள்ளது.

100% வாக்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவா்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்தனா். இவா்கள் ஏற்கெனவே உள்ளாட்சித் தோ்தல், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் வாக்களித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com