வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சுவாமி திருவீதி உலா

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சயன கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
சயன கோலத்தில் உலா வந்த அதிதீஸ்வரா் சுவாமி.
சயன கோலத்தில் உலா வந்த அதிதீஸ்வரா் சுவாமி.

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சயன கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன.

சிவன்-பாா்வதி திருக்கல்யாணம், தோ் வீதி உலா, சித்ரா பௌா்ணமி தொடா்ந்து நிறைவு நாளையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சயன கோலத்தில் வீதி உலா நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள், ஊா் பொது மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com