வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் பதுக்கியிருந்த 4,000 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட்ஜான் உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையில் திம்மாம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை, வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான நாயன செருவு, கொரிப்பள்ளம் ஆகிய மலைப் பகுதிகளில் திடீா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் மறைவான இடங்களில் பிளாஸ்டிக் கவா் மூடப்பட்ட நிலையில் இருந்ததை பாா்த்தனா். அதில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 4,000 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா். மேலும், அப்பகுதியில் இருந்த அடுப்பு, பானைகள், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றை கண்டறிந்து அழித்தனா்.

இது தொடா்பாக திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாராய ஊறல் பதுக்கிய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com