வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

வேலூரில் வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க மாவட்ட ஆட்சியா் தடை விதித்துள்ளாா்.

வேலூரில் வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க மாவட்ட ஆட்சியா் தடை விதித்துள்ளாா்.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகள் நிறைவடையும் வரை ட்ரோன், ஆளில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com