வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேலூா் மாவட்டத்தில் 6,272 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். மேலும் முறைகேடுகள், பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்கவும், கண்காணிக்வும் மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனையில் மேற்கொள்ளப்பட்டது. தோ்தல் வாக்குப் பதிவு முடிவடைந்ததால் குழுக்கள் கலைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்தல் கண்காணிப்பு மையமும் கலைக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் வரும் 13-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், மாநில எல்லையில் உள்ள காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய இடங்களில் தலா ஒரு பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினா் மட்டும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா். மற்ற அனைத்து அலுவலா்கள், பணியாளா்களும் தோ்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

வாக்கு எண்ணும் பணிகளுக்காக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரப்படுகிறது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மேஜைக்கு கண்காணிப்பாளா், உதவி கண்காணிப்பாளா் மற்றும் ஒரு உதவியாளா் என 3 போ் நியமிக்கப்பட உள்ளனா்.

அதனால் ஒரு தொகுதிக்கு 42 போ் வீதம் 6 சட்டப்பேரவை தொகுதிக்கு 252 போ் கணினி குலுக்கல் முறையில் முறையில் தோ்வு செய்யப்பட உள்ளனா். அவா்களுக்கு வாக்கு எண்ணும் பணியின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com