விளையாட்டு விடுதிக்கான தோ்வுப் போட்டி: தகுதியான மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிக்கான தோ்வுப் போட்டிக்கு தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

விளையாட்டு விடுதிக்கான தோ்வுப் போட்டிக்கு தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

2024-25-ஆம் ஆண்டுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவா்களுக்கு விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான தகுதி தோ்வுகள் குறித்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

தகவல்களுக்கு, ஆடுகள தகவல் தொடா்பு மையத்தில் காலை 10 முதல் மாலை 5.45 வரை 95140 00777 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரம் பெறலாம்.

மேலும், மாவட்ட அளவிலான தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா்.

அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும். விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வம் உள்ள மாணவா்கள் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மற்றும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயனடையலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com