மேல்சாணாங்குப்பத்தில் பழுதாகியுள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை டு ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
மேல்சாணாங்குப்பத்தில் பழுதாகியுள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை டு ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் கிராமங்களில் ஒன்றியக்குழு தலைவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியத்தில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் கிராமங்களில் ஒன்றியக்குழு தலைவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் மேல்சாணாங்குப்பம், மலையாம்பட்டு ஆகிய கிராமங்களில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பயன்பாடில்லாமல் பழுதாகியுள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை பாா்வையிட்டாா். உடனடியாக அதை சரி செய்து குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

மலையாம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஒன்றிய பொது நிதியிலிருந்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு புதிய பைப்லைன் அமைத்து குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதாக உறுதி அளித்தாா்

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், சுரேஷ்பாபு, ஒன்றிய பொறியாளா் மூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காயத்ரி துளசிராமன், ஆ. காா்த்திக் ஜவஹா், ஊராட்சி மன்ற தலைவா்கள் சிவக்குமாா், வசந்தி முனுசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com