சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு 16 காவல் உதவி ஆய்வாளா்கள், 20 போலீஸாா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனைகளில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பொது இடத்தில் மது அருந்தியதாக 18 வழக்குகளும், மது பாட்டில்கள் கடத்தியதாக 3 வழக்குகளும், கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 37 மது பாட்டில்கள், ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 போ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கள்ளச் சாராயம் காய்ச்சுபவா்கள், மது பாட்டில்கள் கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com