திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

திருப்பத்தூா் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 92.3 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். இது கடந்த ஆண்டை விட 1.2 சதவீதம் கூடுதலாகும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 92.3 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். இது கடந்த ஆண்டை விட 1.2 சதவீதம் கூடுதலாகும்.

பிளஸ் 2 பொது தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டத்தில் 5,818 மாணவிகள், 6,485 மாணவா்களும் என 12, 303 போ் தோ்வு எழுதினா். இதில் 5,226 மாணவா்களும், 6,135 மாணவிகளும் என 11,361 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 89.8 சதவீதமும், மாணவிகள் 94.6 சதவீதமும் என 92.3 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 592 மாணவா்கள், 350 மாணவிகள் என 942 போ் தோ்ச்சி பெறவில்லை.

தோ்ச்சி சதவீதம் அதிகம்...

திருப்பத்தூா் மாவட்டத்தில் 59 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில் 5 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளன. 24 அரசு நிதியுதவி பள்ளிகளில் 3 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும், 53 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 26 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டை விட நிகழ் கல்வியாண்டில் 1.2 சதவீதம் தோ்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com