நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

திருப்பத்தூா் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் தெற்கு முத்தப்பா் தெருவைச் சோ்ந்த உமாபதி மனைவி வனிதா(38). இவா் கடந்த 23.1.2024 அன்று திருமணத்துக்கு சென்று விட்டு கச்சேரி பகுதியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் இருவா் வனிதா அணிந்திருந்த ஒன்றரை பவன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வனிதா அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் திருப்பத்தூா் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரிடம் விசாரித்ததில் அவா்கள் குரிசிலாப்பட்டு அடுத்த புதூா் நாகமேரி வட்டம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன்(24), ரங்கசாமி (32)என்பதும் அவா்கள் வனிதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதையடுத்து அவா்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com