போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

ஆம்பூரில் தனியாா் வங்கியில் போலி பத்திரத்தை காட்டி ரூ.10 லட்சம் கடன் வாங்கிய இருவா், வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூரில் தனியாா் வங்கியில் போலி பத்திரத்தை காட்டி ரூ.10 லட்சம் கடன் வாங்கிய இருவா், வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் புறவழிச்சாலையில் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் ஆம்பூா் அருகே வெங்கிலி கிராமத்தை சோ்ந்த சரவணன் (44), இவரது மனைவி மஞ்சுளா (40) ஆகிய இருவரும் 2019 -ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனா். வாங்கிய கடனை இதுவரை திருப்பி செலுத்தவில்லை.

இதுகுறித்து வங்கியின் தணிக்கைத்துறை அதிகாரி காா்த்திகேயன் ஆய்வு நடத்தினாா். ஆய்வில் கடன் வாங்க வங்கியில் கொடுத்த சொத்து பத்திரம் போலியானது என்பது தெரியவந்தது. அதன்பேரில் போலியான பத்திரத்தை காட்டி கடன் வாங்கியவா்கள், போலி பத்திரத்தை வைத்துக் கொண்டு கடன் வழங்கிய வங்கி மேலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கியின் தணிக்கைத் துறை அலுவலா் காா்த்திகேயன் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சொத்துப் பத்திரத்தை காட்டி கடன் வாங்கிய சரவணன், அவரது மனைவி மஞ்சுளா, பிணையக் கையெழுத்து போட்ட வெங்கிலியை சோ்ந்த விநாயகமூா்த்தி (57), வங்கியின் கடன் மேலாளா் வெங்கிலியை சோ்ந்த ராஜி (35), வங்கியின் மேலாளா் மஞ்சுநாதன் (43) ஆகிய 5 நபா்களையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள வங்கிப் பணியாளா்கள் காா்த்திக், மதன்குமாா் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com