மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கூட்டுறவுத் துறையில் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: ஊழியர் சங்கம்  வலியுறுத்தல்

கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

Updated On :3 செப்டம்பர் 2018, 7:34 pm

கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவள்ளூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.பூபாலன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் என்.நித்தியானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில், புதிய நிர்வாகிகளாக இச்சங்கத்தின் தலைவராக எம். செல்வம், செயலாளராக அங்கமுத்து, பொருளாளராக சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை கூட்டுறவு நியாய
விலைக் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோல், கூட்டுறவுத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்துதல் மற்றும் பணி வரன்முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், கூட்டுறவு சங்க அச்சக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.