உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மாதவரத்தில் பொங்கல் விழா

மாதவரம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On :15 ஜனவரி 2019, 3:31 am IST

மாதவரம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவில், ஏழை, எளிய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை வடக்கு மாவட்டம் மாதவரம் தெற்குப் பகுதி 32-ஆவது வட்டம் லட்சுமிபுரத்தில் திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா, 32-ஆவது வட்டச் செயலர் குட்டிமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாதவரம் தெற்கு பகுதி செயலர் துக்காராம் முன்னிலை வகித்தார். 
மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஏழை, எளியோருக்கு அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை அவர் வழங்கினார்.
இந்த விழாவில், திமுக நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் பண்ணைசந்திரசேகர், வட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் குட்டிமோகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.