தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்
By DIN | Published On : 01st April 2019 09:01 AM | Last Updated : 01st April 2019 09:01 AM | அ+அ அ- |

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் குளக்கரை வீதியில் அமைந்துள்ள இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில், நித்தியம், நைமித்திகம் ஆகிய பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
நைமித்திக பூஜையாகக் கருதப்படும் பங்குனி மாத பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் உற்சவர்கள் வீதியுலா வந்தனர். இந்த நிகழ்வில் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பங்குனி மாத பிரம்மோற்சவம் தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ளது. நாள்தோறும் காலை, இரவு ஆகிய நேரங்களில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.