கும்மிடிப்பூண்டியில் திமுகவினர் பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 01:09 AM | Last Updated : 17th April 2019 01:09 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, திமுகவினர் கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் கி.வேணு தலைமையில் நடைபெற்ற பிரசாரத்துக்கு, திமுக மாவட்ட அவைத் தலைவர் பகலவன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மேற்கு ஒன்றியச் செயலர் மணிபாலன், நகர நிர்வாகிகள் அறிவழகன், கருணாகரன், காங்கிரஸ் நிர்வாகி சம்பத், மார்க்சிஸ்ட் நிர்வாகி துளசி நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பஜாரில் தொடங்கி அனைத்து வார்டுகளிலும் திறந்த வேனில் இருந்தபடி, திமுக, அதன் கூட்டணிக் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...