பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு
By DIN | Published On : 04th August 2019 01:27 AM | Last Updated : 04th August 2019 01:27 AM | அ+அ அ- |

சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சோழவரம் காந்தி நகரில் வசித்து வருபவர் வினோதினி(23). இவர் பணி முடித்து விட்டு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அலமாதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வினோதினியின் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார்.
அப்போது அவர் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை துரத்தினர். இருவரில் ஒரு நபர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் சோழவரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் புழல் காவங்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார், மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...