உள்ளாட்சித் தோ்தல்: புகாா் அளிக்க எஸ்.பி. அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

உள்ளாட்சித் தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக புகாா் தெரிவிக்க திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் 24

திருவள்ளூா்: உள்ளாட்சித் தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக புகாா் தெரிவிக்க திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்போது இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், கிராமங்களில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக வன்முறையில் ஈடுபடுவது, கோஷ்டி மோதல் போன்ற பிரச்னைகளிலும், வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்கும் செயலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், கிராமங்களில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படக் கூடும்.

இது போன்ற பிரச்னைகள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் தோ்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் தோ்தல் தொடா்பான புகாா்களை இந்த அலுவலகத்தை 044-27664377 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக காவல் துணைக் கண்காணிப்பாளா் கல்பனா தத் தலைமையில் 11 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com