3 கிராமங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்
By DIN | Published On : 12th February 2019 05:10 AM | Last Updated : 12th February 2019 05:10 AM | அ+அ அ- |

புழல் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கிராண்ட்லைன், வடகரை, தீர்த்தக்கரியம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள், புழல் ஒன்றியச் செயலர் நா.ஜெகதீசன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றிய அவைத்தலைவர் வி.திருமால், ஊராட்சி செயலர்கள் சுதாகர், அற்புதராஜ், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டங்களில் சாமியார் மடம், பாபா நகர், கிருஷ்ணா நகர், தண்டல்கழனி ஆகிய பகுதிகளில் பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்ட தரமற்ற உபரி நீர் கால்வாய் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் புழல் ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகளும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 40 கி.மீ.தூரம் பல்வேறு பணிகளுக்காக சுற்றித் திரிய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புழல் ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகளையும், மீண்டும் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.