ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்: 7,881 பேர் எழுதினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வை 7,881 பேர் எழுதினர். 


திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வை 7,881 பேர் எழுதினர். 
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தாள் தேர்வுக்கு 23 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர். பின்னர், 9.30 மணி முதல் ஒவ்வொரு மையத்திலும் பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சரிபார்த்து உள்ளே அனுப்பி வைத்தனர். 
இதில் ஜே.என்.சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இத்தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி முதல் தாளுக்கு 23 தேர்வு மையங்களும், இரண்டாம் தாளுக்கு 32 தேர்வு மையங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளன.  இதற்காக வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர், பொன்னேரி ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆவடி கல்வி மாவட்டத்துக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையம், ஆவடி, இமாகுலேட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதல் தாள் தேர்வுக்கு 23 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 23 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 23 துறை அலுவலர்கள், 23 கூடுதல் துறை அலுவலர்கள் 8 வழித்தட அலுவலர்கள் மற்றும் 441 அறைக் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 541 பேர் பணியில் ஈடுபட்டனர். 
இதில் முதல் தாள் தேர்வில் இம்மாவட்டத்தில் 8,784 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,881 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் 903 பேர் பங்கேற்கவில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர் என்றார். 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் (பிளஸ் 2) திருவரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com