ஆசிரியர் பட்டயத் தேர்வு நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்
By DIN | Published On : 09th June 2019 12:09 AM | Last Updated : 09th June 2019 12:09 AM | அ+அ அ- |

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை தேர்வர்கள் சனிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஜூன்-2019 இரண்டாம் ஆண்டுக்கான இத்தேர்வு வரும் 14-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல், முதலாம் ஆண்டு தேர்வு வரும் 15-இல் தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதேபோல், இத்தேர்வுக்கு வருகை தரவிருக்கும் தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்தோர் மற்றும் தனித்தேர்வர்கள் அனைவரும் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து சனிக்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.