பாம்பு கடித்து பெண் பலி
By DIN | Published On : 09th June 2019 01:02 AM | Last Updated : 09th June 2019 01:02 AM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அக்கரபாக்கம் கிராமத்தில் விஷப் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தார்.
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அக்கரபாக்கம் கிராமத்தில் ராமு என்பரின் வீட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பாம்பு ஒன்று வந்தது. ராமுவின் மனைவி மல்லி (எ) வள்ளியம்மாளை (35) அப்பாம்பு கடித்ததில், அவர் மயக்கம் அடைந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் பொன்னேரி அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியதால், உயிரிழந்தார். இது தொடர்பாக பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.