இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி
By DIN | Published On : 14th June 2019 03:47 AM | Last Updated : 14th June 2019 03:47 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகள் கீர்த்திகா. இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வியாழக்கிழமை கீர்த்திகா தனது தந்தை சீனிவாசனுடன் பைக்கில் திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் கீர்த்திகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சீனிவாசன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.