மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
By DIN | Published On : 14th June 2019 03:46 AM | Last Updated : 14th June 2019 03:46 AM | அ+அ அ- |

பொன்னேரி அருகே தென்னை மரத்தில், இளநீர் பறிக்க முயன்றவர் உள்ளிட்ட இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெருஞ்சேரி கிராமத்தில் வசித்தவர் விஸ்வநாதன் (42). இவரது உறவினர் தட்சிணாமூர்த்தி (18). உடல்நிலை சரியில்லாத தனது தந்தைக்கு இளநீர் பறித்துவருவதற்காக, தட்சிணாமூர்த்தி வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு வியாழக்கிழமை சென்றார். அங்கு இரும்புக் கம்பியைக் கொண்டு அவர் இளநீரை பறிக்க முயன்றுள்ளார். தென்னை மரங்களின் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகளை அவர் கவனிக்கவில்லையாம்.
இந்நிலையில், கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி, மின்சாரம் செல்லும் கம்பியில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில், தட்சிணாமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற விஸ்வநாதன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் உயிரிழந்தனர். பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.