வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 22nd March 2019 07:49 AM | Last Updated : 22nd March 2019 07:49 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் செய்தி தொடர்புத் துறை சார்பில் வியாழக்கிழமை வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வருவாய் ஆய்வாளர் ஜெ.ரதி, கிராம நிர்வாக அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கு அனைவரும் துணை புரிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், வாகனத்தில் இருந்து ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பிரசாரம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், எளாவூர், சுண்ணாம்புக்குளம், மாதர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...