திருத்தணியில் சனிக்கிழமை அதிகபட்சமாக 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. மாலையில் திடீரென பெய்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருத்தணியில் கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு விட்டன. போதிய மழை இல்லாத காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இதில், திருத்தணி நகரம், ஒன்றியங்களில் தினந்தோறும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து, மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடையில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி, ஒன்றிய நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணியில் சனிக்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மாலை 5 மணி வரை இந்நிலை நீடித்தது. 111.2 டிகிரி வெயில் பதிவானது.
மாலை 6 மணிக்கு திடீரென திருத்தணியில் மழை பெய்தது. இதனால் ஓரளவு குளிர்ச்சி நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.