குடிநீர் டிராக்டர் கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 19th May 2019 04:35 AM | Last Updated : 19th May 2019 04:35 AM | அ+அ அ- |

திருத்தணி புறவழிச் சாலையில் குடிநீர் ஏற்றிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.
திருத்தணி நகராட்சியில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தனியார் நபர்கள், 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் நகராட்சியில் விலைக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை, திருத்தணி குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் டிராக்டர் மூலம் டேங்கில் குடிநீர் நிரப்பிக் கொண்டு, குமாரகுப்பத்தில் இருந்து திருத்தணி புறவழிச் சாலையில் சென்றார்.
அப்போது புறவழிச் சாலை ரவுண்டானா பகுதியில் டிராக்டர் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில், குமார் லேசான காயம் அடைந்தார்.