இலவச கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 26th May 2019 12:25 AM | Last Updated : 26th May 2019 12:25 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேட்டில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
உமா கண் மருத்துவமனையின் விஷன் அமைப்பு மற்றும் கும்மிடிப்பூண்டி கிருஷ்ணா கண் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய முகாமை, தொழிலதிபர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். ரெட்டம்பேடு ஊராட்சி செயலர் குருமூர்த்தி, கிருஷ்ணா கண் பரிசோதனை மையத்தின் நிறுவனர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், உமா கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் தாரிக், கண் பரிசோதகர்கள் ஜோதி, ராஜேஷ் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கண் பரிசோதனை, கிட்டப் பார்வை, தூரப் பார்வை பரிசோதனை, கண் நீர் அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முகாமில், 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், இவர்களில் 75 பேருக்கு கண் கண்ணாடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், 8 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.