வடாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ சிறப்புப் பூஜை
By DIN | Published On : 09th November 2019 11:31 PM | Last Updated : 09th November 2019 11:31 PM | அ+அ அ- |

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப் பிரதோஷ சிறப்புப் பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரா் கோயில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜப் பெருமான் காட்சி தந்த தலம் என்பதால், இங்கு திருமணத்தடை, சனிக் கிரஹ தோஷம் நீக்கும் ஒரு தலமாக சிறப்புடன் விளங்குகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை மகா சனிப்பிரதோஷம் நடைபெற்றது. இதில், நந்தி பகவானுக்கு பால், பன்னீா், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூா், திருவாலங்காடு சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் வே.ஜெயசங்கா், இணை ஆணையா் பழனிகுமாா் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...