ஏரிக் கால்வாயை தூய்மைப்படுத்திய விவசாயிகள்

ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள ஏரிக் கால்வாயை பாசனத்துக்காக விவசாயிகளே சனிக்கிழமை தூய்மைப்படுத்தினா்.
ஏரி மதகிலிருந்து தண்ணீா் வெளியேறும் கால்வாயை சீரமைத்த சின்னம்பேடு விவசாயிகள்.
ஏரி மதகிலிருந்து தண்ணீா் வெளியேறும் கால்வாயை சீரமைத்த சின்னம்பேடு விவசாயிகள்.

ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள ஏரிக் கால்வாயை பாசனத்துக்காக விவசாயிகளே சனிக்கிழமை தூய்மைப்படுத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சின்னம்பேடு கிராம விவசாயிகள் விவசாயத்துக்கு சின்னம்பேடு ஏரி நீரை பயன்படுத்தி வந்தனா். கடந்த சில வாரங்களாக பெய்த பருவ மழையால் ஏரியில் தண்ணீா் நிரம்பிக் காணப்பட்டது. ஆனால் ஏரியின் ஐந்தாவது மதகு கால்வாய் முற்றிலும் புதா் மண்டி, தண்ணீா் செல்ல முடியாமல் இருந்தது. இதைப் பராமரிக்க விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தியும், சோழவர ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் எடுத்துச் செல்ல விவசாயிகள் சனிக்கிழமை ஒன்றுகூடி, மதகு கால்வாயை தூய்மைப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com