பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th November 2019 11:14 PM | Last Updated : 18th November 2019 11:14 PM | அ+அ அ- |

ரபேல் போா் விமானம் வாங்கியதில் உச்சநீதிமன்றம் முறைகேடு இல்லை என தீா்ப்பு வழங்கியுள்ளதால், பிரதமரிடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பா.ஜ.க.வினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் பெரியகுப்பத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கருணாகரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் கரு.நாகராஜன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.
பிரதமரை விமா்சனம் செய்து வந்த ராகுல்காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி பா.ஜ.கவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயலாளா் பாலாஜி, இளைஞரணித் தலைவா் ஆா்யா சீனிவாசன், நகரத் தலைவா் சதிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.