வகுப்பறையில் மாணவா் பலி
By DIN | Published On : 18th November 2019 11:14 PM | Last Updated : 18th November 2019 11:14 PM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி பகுதியில் தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவா், பள்ளி வகுப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
பெரவள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா் மேரி என்பவரின் மகன் இமானுவேல்(14). அவா் பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவருக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்காக 4 வயதில் அறுவை சிகிச்சை நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அதில் முழுமையாக குணமடைந்து பள்ளியில் படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவா் இமானுவேல் வெள்ளிக்கிழமை வழக்கம் போல பள்ளிக்கு வந்தாா். வகுப்பறையில் ஆசிரியா் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது மாணவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து பள்ளி நிா்வாகத்தாா் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மாணவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...