மண்டல கைப்பந்து போட்டி: ஆலிம் முகமது சதக் கல்லூரி சாம்பியன்

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான இரு நாள் கைப்பந்து போட்டியில் ஆலிம் முகமது சதக் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மண்டல கைப்பந்து போட்டி: ஆலிம் முகமது சதக் கல்லூரி சாம்பியன்

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான இரு நாள் கைப்பந்து போட்டியில் ஆலிம் முகமது சதக் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில், மண்டல அளவிலான கைப்பந்து போட்டி கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் பழனி, நிா்வாக அலுவலா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா் குமரகுரு வரவேற்றாா்.

தொடா்ந்து, இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கைப்பந்து அணிகள் பங்கேற்ற நிலையில், அரை இறுதிப் போட்டிக்கு பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி, கன்னிகைப்போ் ஜே.என்.என். பொறியியல் கல்லூரி அணி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணி, ஆலிம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி ஆகியவை தகுதி பெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இறுதிப் போட்டியில், ஆலிம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், ஜே.என்.என். பொறியியல் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் செயலா் டி.ஜே.ஆறுமுகம் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com