காா், வேன் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 20th October 2019 03:11 AM | Last Updated : 20th October 2019 03:11 AM | அ+அ அ- |

திருத்தணியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா், வேன் கண்ணாடிகளை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருத்தணி காந்தி ரோடு 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் டில்லிபாபு (27). தனியாா் நிறுவனகாா் ஓட்டுநா். வியாழக்கிழமை இரவு, நிறுவனத்துக்குச் சொந்தமான காரை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றாராம். வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து பாா்த்தபோது காா் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், காா் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் கண்ணாடியை உடைத்து பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...